search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் தப்பி ஓட்டம்"

    தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னை:

    தேனாம்பேட்டை பகுதியில் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் செல்போன் திருட்டு தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். செம்மஞ்சேரியை சேர்ந்த அந்த சிறுவனிடம் இருந்து 3 செல்போன்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இச்சிறுவனுடன் தொடர்புடைய 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று காலையில் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சிறுவன், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுவனை தேடி வந்தனர். செம்மஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த அவனை நேற்று இரவு போலீசார் மடக்கி பிடித்தனர்.

    தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்னர் சிறுவன் செம்மஞ்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தான். சில நாட்களுக்கு முன்பு வெளியில் வந்த அவன் மீண்டும் கைவரிசை காட்டிய போதுதான் சிக்கியுள்ளான். சாலையோரமாக தூங்குபவர்களிடம் கைவரிசை காட்டுவதை சிறுவன் வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    சேலத்தில் காப்பகத்தில் இருந்த சிறுவன் மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சூரமங்கலம், பாரதி தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி பிரியாதேவி (வயது 29). இவர் சமூக பாதுகாப்பு இயக்கம் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 3-ந்தேதி ஜங்சன் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுவனை மீட்டு ரெயில்வே போலீசார் இந்த காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த சிறுவன் தனது பெயர் ரஞ்சித்(14) என்றும் தந்தை பெயர் ராமகிருஷ்ணன் என்றும் 5-ரோடு பகுதியில் வசிப்பதாக விசாரணையில் தெரிவித்தான்.

    அந்த பகுதியில் போலீசார் சென்று விசாரித்தபோது, சிறுவன் கூறியது தவறான தகவல் என தெரியவந்தது. இதனிடையே காப்பகத்தின் பின்பக்க மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடி விட்டான். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறுவனை தேடி வருகிறார்கள்.

    ×